கம்பராமாயணம் பாகம்-2

தாதுகு  சோலை தோறும்  சன்பகக் காடு  தோறும்
போதவிழ்  பொய்கை  தோறும்  புதுமணல்  தடங்கள்  தோறும் 
மாதவி  வேலிப்  பூக  வனந்தோறும்  வயல்கள்  தோறும்
ஓதிய  உடம்பு  தோறும்  உயிரென  உலாய  தன்றே 






பொருள்:
           மகரந்தப்பொடி  சிந்தும்  சோலைகள்,  செண்பகம்  செறிந்த  காடுகள்,  பூக்கள்  விரிந்த  நீர்நிலைகள்,  நல்ல  மணற்கரைத்  தடாகங்கள்,  மாதவிக்  கொடிகளை  வேலியாகக்  கொண்ட  கமுகுத்  தோட்டங்கள், பிற வயல்கள்,  எங்கும்  சரயுநதி,  உடம்புள் உயிர் உலாவி நிற்பது போலப்,  பாய்ந்து  பரவி  வளங் கொடுத்தது.

௧௧/கும்பம்


கருத்துரையிடுக

புதியது பழையவை