மரபு கவிதையின் படிநிலை-19-யாப்பிலக்கணம்(சீர்)-பாகம்-ஒன்று

 சீர்

அசைகள் தனித்தோ அல்லது இணைந்தோ வந்து ஒரு பாடலுக்கு உறுப்பாய் அமைவது சீர் எனப்படும்.

சீர் நான்கு வகைப்படும்:

*ஓரசைச்சீர்

*ஈரசைச்சீர்

*மூவசைச்சீர்

*நான்கசைச்சீர்


ஓரசைச்சீர்

நேரசை தனித்து வருவது(பல்)-நாள் எனப்படும்

நிரையசை தனித்து வருவது(வலை)-மலர் எனப்படும்


நேரசை + குற்றியலுகர எழுத்துக்கள்(கு,சு,டு,து,பு,று)(பாடு)-காசு எனப்படும்

நிரையசை + குற்றியலுகர எழுத்துக்கள்(கு,சுடு,து,பு,று)(உலகு)-பிறப்பு எனப்படும்


நேரசையுடனோ,நிரையசையுடனோ இறுதியில் குற்றியலுகர எழுத்து வந்தால் அது வெண்பா எனும் பா வகையின் கடைசி சொல்லாக வரும்போது மட்டுமே அது ஓரசைச்சீராக எடுத்துக்கொள்ளப்படும்.

அசை-பயிற்சித்தாள்

மரபு கவிதை இயற்றுதல் சார்ந்த மற்ற படிநிலைகள்






கருத்துரையிடுக

புதியது பழையவை