மரபு கவிதையின் படிநிலை-12 ஐகாரக்குறுக்கம்-ஏழாம் சார்பெழுத்து

 ஐகாரக்குறுக்கம்

"ஐ" எனும் எழுத்து ஒரு நெடில் எழுத்து அது இரண்டு மாத்திரை அளவு உடையது."ஐகாரம்"குறைந்து ஒலிக்கும் போது "ஐகாரக்குறுக்கம்" எனப்படும்."ஐ" தனித்து வரும் போது இரு மாத்திரை அளவு கொண்டு வரும்.  

"ஐ" எனும் எழுத்து ஒரு சொல்லின்

முதலில்-1 ½ மாத்திரை

இடையில்-1 மாத்திரை

இறுதியில்-1மாத்திரை


"ஐ" எனும் எழுத்து அளபெடுக்கும் போது அது தன் இயல்பான இரண்டு மாத்திரை அளவிலேயே ஒலிக்கும்.



"அளபெடுப்பது"எனும் சொல் சார்பெழுத்துக்களுள் ஒன்றான அளபெடையையே குறிக்கும். "அளபெடை" பற்றி நாம் வரும் பதிவுகளில் காண்போம்.


ஐகாரக்குறுக்கம்-பயிற்சித்தாள்

மரபு கவிதை இயற்றுதல் சார்ந்த மற்ற படிநிலைகள்


௨௰௧/மடங்கல்



 

கருத்துரையிடுக

புதியது பழையவை