குற்றியலிகரம்
ஈற்றில்(கடைசியாக)வல்லின உகரங்கள் கொண்டு முடியும் சொல்லானது நிலைமொழியாக வந்து வருமொழியின் முதல் எழுத்து "யகர" எழுத்தாக வந்தால் அவ்விரண்டிற்கும் நடுவில் ஒரு "இகரம்" தோன்றும் அந்த இகரத்தின் மாத்திரை தன் இயல்பான ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரையாக குறையும்.
பாடுவது+யாரு=பாடுவதியாரு
அந்த சொல்லின் இறுதியில் இருக்கும் வல்லின உகரம் இகரமாக திரிந்து வருமொழி எந்த திரிபுமின்றி வரும்.
"மியா" என்பது ஒரு அசைச்சொல். "அசைச்சொல் என்பதைப்பற்றி நாம் பிறகு காண்போம்" இந்த "மியா" எனும் சொல்லிற்கு பொருளே இல்லை.
கேள்+மியா=கேண்மியா
இதில் வரும் "மி" எனும் எழுத்து தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாக குறையும்.
மரபு கவிதை இயற்றுதல் சார்ந்த மற்ற படிநிலைகள்
௧௰௫/மடங்கல்