ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்

நன்னூலை எழுதிய பவணந்தி முனிவர் தமிழில் 42 ஒரெழுத்து ஒருமொழிச் சொற்கள் உள்ளதாக குறிப்பிடுகின்றார்.

ஆ-பசு

ஈ-ஈகை(கொடு),பறக்கும் ஈ

ஊ-இறைச்சி

ஏ-அம்பு

ஐ-தலைவன்

ஓ-மதகு

கா-சோலை

கூ-பூமி

கை-உடல் உறுப்பு,ஒழுக்கம்

கோ-அரசன்

சா-இறப்பது

சீ-இகழ்ச்சி

சே-உயர்வு

சோ-மதில்

தா-கொடு

தீ-நெருப்பு

தூ-தூய்மை

தே-கடவுள்

தை-மாதத்தின் பெயர்,தைத்தல்

நா-நாவு

நீ-ஒருவரை குறிப்பது

நே-அன்பு

நை-இழிவு

நோ-வறுமை

பா-பாடல்

பூ-மலர்

பே-மேகம்

பை-பொருட்களை தாங்கும் பொருள்,இளமை

போ-செல்

மா-மாமரம்

மீ-வான்

மூ-மூப்பு

மே-அன்பு

மை-அஞ்சனம்

மோ-முகத்தல்

யா-அகலம்

வா-அழைத்தல்

வீ-கீழே வீழ்ந்த மலர்

வை-புல்

வௌ-கவர்

நொ-நோய்

து-உண்


இந்த பட்டியலில் 'து,நொ" என்ற இரு எழுத்துக்கள் மட்டும் தான் குறில் எழுத்துக்கள்


௩/சுறவை/௨௦௫௩

நன்றி





கருத்துரையிடுக

புதியது பழையவை