மரபு கவிதையின் படிநிலை-3 மாத்திரை

 மாத்திரை


 ஒரு எழுத்தை நாம் உச்சரிப்பதற்காக எடுத்துக்கொள்ளும் கால அளவே மாத்திரை எனப்படும்.


ஒரு மாத்திரை அளவு என்பது ஒரு முறை கண் இமைப்பதோ அல்லது ஒரு முறை கை சொடுக்குவதோ ஆகும்.

குறில்,நெடில்

1 மாத்திரை அளவுடைய எழுத்து-குறில் 

2 மாத்திரை அளவுடைய எழுத்து-நெடில்


உயிர் எழுத்துக்களில் குறில்(உயிர்க்குறில்)-5

அ,இ,உ,எ,ஒ


உயிர் எழுத்துக்களில் நெடில்(உயிர் நெடில்)-7

ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ


உயிர்மெய் எழுத்துக்களில் குறில்(உயிர்மெய்க்குறில்)-90

5(குறில்) x 18(மெய்)=90 உயிர்மெய்க்குறில்

க்+அ=க

ப்+ஒ=பொ

உயிர்மெய் எழுத்துக்களில் நெடில்(உயிர்மெய் நெடில்)-126

7(குறில்) 18(மெய்)=126 உயிர்மெய்நெடில்

  ல்+ஈ=லீ

  ந்+உ=நூ


ஆயுத எழுத்தின் மாத்திரை அளவு-1/2

மெய் எழுத்தின் மாத்திரை அளவு-1/2


ஒரு சொல்லின் மாத்திரை அளவை கண்டறிவது எவ்வாறு?


பாடல்

பா-உயிர்மெய் நெடில்-2 மாத்திரை அளவு

ட-உயிர்மெய்க்குறில்-1 மாத்திரை அளவு

ல்-மெய்-1/2 மாத்திரை அளவு


பாடல்-3 ½ மாத்திரை அளவு 


சொற்பொழிவு

சொ-உயிர் மெய்க்குறில்-1 மாத்திரை அளவு

ற்-மெய்-1/2 மாத்திரை அளவு

பொ-உயிர்மெய்க்குறில்-1 மாத்திரை அளவு

ழி-உயிர்மெய்க்குறில்-1 மாத்திரை அளவு

ட-உயிர்மெய்க்குறில்-1 மாத்திரை அளவு-உயிர்குறில்-1 மாத்திரை அளவு


சொற்பொழிவு-4 ½ மாத்திரை அளவு


மேலும் ஆர்வம் உள்ளவர்கள் இதை சொடுக்குங்கள்:

 


மரபு கவிதை இயற்றுதல் சார்ந்த மற்ற படிநிலைகள்



கருத்துரையிடுக

புதியது பழையவை