மரபு கவிதையின் படிநிலை-18-யாப்பிலக்கணம்(அசை)

 அசை

ஓர் எழுத்து தனித்து நின்றோ அல்லது பல எழுத்துக்கள் சேர்ந்து அசைந்து (பிரிந்து) நிற்பது.

அசை இரண்டு வகை படும்:

*நேரசை

*நிரையசை

நேரசை

*ஒரு குறில்(க)

*ஓரு குறில்+ஓரு ஒற்று(கல்)

*ஒரு நெடில்(கா)

*ஓரு நெடில்+ஓரு ஒற்று(கால்)


நிரையசை

*இரு குறில்(கட)

*இரு குறில்+ஓரு ஒற்று(குளம்)

*ஒரு குறில் +  ஒரு நெடில்(படா)

*ஒரு குறில் +  ஒரு நெடில் + ஓரு ஒற்று(கடாம்)



ஒரு ஒற்றெழுத்தை தொடர்ந்து மற்றொரு ஒற்றெழுத்து வரும் போது அதற்கு முன்புள்ள அசையோடு அந்த குறில் இணையும்.


எ.கா

டர்ந்

டர்-என்பது நேரசை(ஓரு குறில் + ஒரு ஒற்று)

இதை தொடர்ந்து "ந்" எனும் ஒரு ஒற்று வருவதால் "டர்ந்" என்பது நேரசை ஆகும்.


அசை - பயிற்சித்தாள்

மரபு கவிதை இயற்றுதல் சார்ந்த மற்ற படிநிலைகள்


௪/கன்னி


கருத்துரையிடுக

புதியது பழையவை