எலும்பும் நாயும் (வெண்பா வடிவில்)

 வீதி வளரும்நா யொன்று குடிகண்டு

அஞ்சுமித னால்பல் விழிசினம் கொண்டது

வேரொட் டியநிலம்பு ரைய உடலொட்

டியது ஞமலியின் தோல்

நிலம்-மண் ஞமலி-நாய் குடி-மக்கள்

 பொருள்

ஓரு தெருவில் ஒரு நாய் இருந்தது மக்கள் அதற்கு உதவி செய்ய நினைத்தாலும் அது மக்களை கண்டு அஞ்சுவதால் மக்கள் அந்த நாயை விரும்புவதில்லை அந்த நாயின் சதை, வேருடன் ஒட்டிய மண்ணை போல உடலோடு ஒட்டியிருக்கும் அளவிற்கு அது மெலிந்து காணப்பட்டது

தரைதனில்எ லும்பை விழிகண் டதுநா

உளன்ற துதேற்சக்க ரம்பிடித்த அச்சுநிகர்

கவ்வி யதுஎலும் பைஇ அதுவோ

டியதுதா னோடாஓட் டம்

 அச்சு-அச்சாணி

பொருள்

தரையில் ஒரு எலும்பை கண்டது அதை கண்டதும் அதன் நாவு ஊரியது தேரின் சக்கரத்தை பிடித்த அச்சாணியை போல அவ்வெலும்பை கௌவ்வி கொண்டது.தான் அதுவரை ஓடிடாத வேகம் ஓடியது

எலும்பு மறைக்க அருவிக டந்தது

நீரில்தன் பிம்பம் தெரிந்தது அஃதிலுள்

ளஎலும்பை கண்டு குரைத்த துவிழுந்

ததாம்அவ் வெலும்புநீ ருள்

 

பொருள்

 

கிடைத்த எலும்பை மறைத்து உண்பதற்காக எலும்பை கௌவ்விக்கொண்டு அருவிமீது நடந்தது. நீரில் தன் பிம்பம் கண்டு மற்றொரு நாய் என்று நினைத்து குரைத்தது. இதனால் எலும்பு நீருக்குள் விழுந்தது

 

 

ஜெய்டன்..


கருத்துரையிடுக

புதியது பழையவை